சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை மிரட்டிய வண்டுகள்விரட்டிய தீயணைப்பு வீரர்கள்

Added : பிப் 05, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் போலீசாரை மிரட்டிய விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் தீவைத்து விரட்டினர்.

இந்த அலுவலகத்தை ஒட்டியுள்ள இடத்தில் போலீஸ் துறையின் தகவல் பரிமாற்றத்திற்காக 300 அடி உயர டவர் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதில் விஷவண்டுகள் கூடுகட்டி போலீசாரையும் அவ்வழியாக செல்வோரையும் அச்சுறுத்தி வந்தன. தகவல் தொடர்பு பராமரிப்பு பணிகளுக்காக டவரில் ஏறும் போது அவர்களை இந்த வண்டுகள் தாக்கியது.

டவர் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையின் உதவியை மாவட்ட எஸ்.பி., நாடினார். சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் நேற்று மாலை டவரில் ஏறி விஷ வண்டுகளை தீ வைத்து விரட்டி, அவை கட்டியிருந்த கூட்டையும் அழித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X