பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளியில் குப்பை கொட்டாதீங்க! எச்சரிக்கிறது நகராட்சி நிர்வாகம்

Added : பிப் 05, 2020
Advertisement

வால்பாறை:திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் தனியார் எஸ்டேட்டாக இருப்பதால், அங்கு நகராட்சி சார்பில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை.வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் மட்டும் நகராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை நகரில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள திறந்தவெளிக் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியும் படிப்படியாக நடந்து வருகிறது.இதனிடையே வால்பாறை நகரில் உள்ள வீடு மற்றும் கடைகளில், தினமும் வெளியாகும் கழிவுகளை, துப்புரவு பணியாளர்கள் நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் கூறுகையில், ''வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவுகளை, நகராட்சி பணியாளர்கள் நேரடியாக பெறுகின்றனர். இதை கண்காணிக்க, இரண்டு பரப்புரையாளர்கள், நான்கு மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வீடு மற்றும் கடைகளில், கழிவுகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். திறந்தவெளியில் யார் குப்பை கொட்டினாலும், அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X