பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்குவேளாண் தொழிற்பயிற்சி

Added : பிப் 05, 2020
Advertisement
 மாற்றுத்திறனாளிகளுக்குவேளாண் தொழிற்பயிற்சி

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கடலை, நெல்லிக்காய், பப்பாளி, முருங்கை விளைபொருட்கள் குறித்தும், நாட்டுக்கோழி வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, மீன் பண்ணைகள் அமைப்பது குறித்தும் தொழில் முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி சார்ந்த விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சுயமாக தொழில் தொடங்கவும், வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் உதவி செய்யப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் செந்துார்குமரன், உதவி பேராசிரியர் குமாரவேல், சமூக நல ஆர்வலர் பகீரத நாச்சியப்பன், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X