தமிழ்நாடு

இல்லை காரைக்குடி உழவர்சந்தையில் விவசாயிகள் வரத்து காய்கறிகள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் செயல்படும் உழவர்சந்தை அழிவின் விளிம்பில் இருப்பதாக விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

காரைக்குடி புதிய பேருந்துநிலையம் முன்பு கடந்த2000ல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. 60 கடைகளுடன் செயல்படதொடங்கிய உழவர்சந்தையில், அரியக்குடி, இலுப்பக்குடி, கோட்டையூர், புதுவயல், தேவகோட்டை ரஸ்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த
விவசாயிகள் காய்கறிகளை விற்று வந்தனர்.

தினமும் தங்கள் பகுதியில் விளைந்த காய்கறிகளை நேரடியாக விற்பனைக்கு கொண்டு
வந்ததால், பொதுமக்களும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளின் நேரடி விற்பனையால், விலையும் குறைவாக இருந்தது.கடைகள் வைக்க போதிய இடமன்றி விவசாயிகள் அலைந்த காலமும் உண்டு. இங்கு காய்கறிகளை சேமித்து வைக்க கோடவுன், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வியாபாரிகள் சிலர் கூடுதல் விலை வைத்து விற்பதற்காக, உழவர்சந்தையை தவிர்த்து சாலையோரங்களில் கடைகளை அமைத்தனர். அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் சாலையோர கடைகளில் ஆர்வம் காட்டினர். இதனால், உழவர் சந்தையே விவசாயிகள்
வரத்தின்றி வெறிச்சோடி போனது. 60 கடைகள் இருந்த உழவர் சந்தையில் தற்போது வெறும்
5 கடைகள் மட்டுமே செயல்படுகிறது.

இதுகுறித்து முத்து கூறுகையில்; விவசாயிகள், இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதற்காகவே, உழவர் சந்தை கொண்டுவரப்பட்டது. மக்கள் தினமும் தரமானகாய்கறிகளை குறைவான விலைக்கு வாங்கி வந்தனர். தற்போது, உழவர்சந்தை வியாபாரிகள் இன்றி காலியாக கிடக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலையோர வியாபாரிகளை உழவர்சந்தையில் கடை அமைக்க
அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X