கேரளாவுக்கு அதிக நீர் திறப்பு :ஆழியாறு விவசாயிகள் புகார்

Added : பிப் 05, 2020
Advertisement

பொள்ளாச்சி:ஆழியாறு அணையில் இருந்து, கேரளாவுக்கு ஒப்பந்த அளவை விட அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதாக, தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் ஆனைமலையில் நடந்தது.தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். செயலாளர் வித்யாசாகர், பொருளாளர் லோகநாதன் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆழியாறு அணையில் இருந்து ஒப்பந்தப்படி இல்லாமல், கேரளாவுக்கு அதிகளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. மழை இல்லாத காலங்களில், ஜன., - ஏப்., மாதங்களில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பல மடங்கு அதிகமான தண்ணீரை வழங்குவதால், ஆழியாறு அணையில் நீர் இருப்பு குறைந்து விடுகிறது.அடுத்த முறை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தாமதமாகிறது. இதனால், மகசூல் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. எனவே, ஒப்பந்தப்படி மட்டும் கேரளாவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் வழங்க வேண்டும். இது குறித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X