காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 05, 2020
Share
கள்ளக்குறிச்சி:எல்.ஐ.சி.,யின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய அரசின் அறிவிப்பினை கண்டித்து கள்ளக்குறிச்சியில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி., அலுவலக வளாகத்தில் நேற்று பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி கிளை காப்பீட்டுக்கழக ஊழியர்
 காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி:எல்.ஐ.சி.,யின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய அரசின் அறிவிப்பினை கண்டித்து கள்ளக்குறிச்சியில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒரு மணி நேரம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி., அலுவலக வளாகத்தில் நேற்று பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி கிளை காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அருண் வரவேற்றார். எல்.ஐ.சி., முதல்நிலை அதிகாரிகள் சங்க அப்துல் ஹக்கீம், வளர்ச்சி அதிகாரிகள் சங்க ரவிச்சந்திரன், முகவர் சங்க காசிலிங்கம், முகவர் சம்மேளம் கோவிந்தன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மகாலிங்கம், கோட்ட துணை செயலர் வேலாயுதம், கிளைச் செயலர் பாலாஜி கண்டன உரையாற்றினர். கிளை பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X