சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் சாலை மறியல்

Added : பிப் 05, 2020
Advertisement
 மாணவர்கள் சாலை மறியல்

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் அரசு பஸ் வராததால் கல்லுாரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 7:30 மணியளவில் உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரிக்குச் செல்லும் மாணவர்கள் காத்திருந்தனர்.ஆனால், பஸ் வரவில்லை. இதனால், ஆவேசமடைந்த 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஆதிஅண்ணாமலை மற்றும் போலீசார் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பேரில் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு 8:00 மணிக்கு அரசு பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X