ரோடு கடும் சேதம்; டவுன் பஸ் நிறுத்தம் :அன்னூர் அருகில் கிராம மக்கள் அவதி

Added : பிப் 05, 2020
Advertisement

அன்னுார்:அன்னுாரில் ரோடு சேதமானதால், டவுன் பஸ்கள் இயங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.சிறுமுகையில் இருந்து அன்னுார் மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, ரோட்டோரத்தில் குழி தோண்டி, குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.இதற்கு, அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில், குழிதோண்டியுள்ளனர். அதன்பின் தார் ரோடு போடப்படவில்லை. மண் மேடுகளும், குழிகளும் அதிக அளவில் உள்ளன.அன்னுாரிலிருந்து, குமாரபாளையம் வரை ரோடு, மிக மோசமாக இருந்ததால், டவுன் பஸ்கள், இருமுறை விபத்துக்குள்ளாகின. சோளம் ஏற்றி வந்த லாரி ஒன்றும் விபத்தில் சிக்கியது. இதன் காரணமாக, அன்னுாரிலிருந்து, குமாரபாளையம், சொக்கம்பாளையம் வழியாக சோமனுார் மற்றும் கருமத்தம்பட்டிக்கு இயங்கிவந்த ஏ.ஆர் 3, ஏ.ஆர் 7 டவுன் பஸ்கள், நாகமாபுதூர் வழியாக, கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்படுகின்றது.மேலும் குமாரபாளையம் வழியாக, சூலுார், பல்லடம் செல்லும் பஸ்களும் கரியாம்பாளையம் வழியாக செல்கின்றன.இதனால் அதிர்ச்சியடைந்த சொக்கம்பாளையம் மற்றும் குமாரபாளையம் மக்கள், அன்னுார் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் சென்று புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக மேலாளர் முத்துசாமி, ''காலை மற்றும் மாலையில், ஒரு டிரிப் மட்டும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக டவுன் பஸ்களை இயக்குவதாகவும், ரோடு முழுமையாக போட்ட பிறகு தான், பஸ்களை இயக்க முடியும்,''என்றும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, கிராம மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திலும், நெடுஞ்சாலை துறை அலுவலகத்திலும், விரைவில் சாலையை சரி செய்ய வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X