பொது செய்தி

தமிழ்நாடு

மின்கம்பிகளில் உராயும் முள் மரங்கள்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:லிங்காபுரத்தில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், மின்சார கம்பிகளில் உராயும், முள் மரங்களின் கிளைகளை அகற்ற, சிறுமுகை வனத்துறை அனுமதி அளித்துள்ளது.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்தில், 150க்கும் மேற்பட்ட வீடுகள், வனப்பகுதி அருகே அமைந்துள்ளன. அதனால் வனப்பகுதிகளில் சுற்றும் யானைகள், லிங்காபுரம் ஊருக்குச் செல்லும் சாலையை கடந்து, விவசாய நிலங்களுக்கு

மேட்டுப்பாளையம்:லிங்காபுரத்தில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், மின்சார கம்பிகளில் உராயும், முள் மரங்களின் கிளைகளை அகற்ற, சிறுமுகை வனத்துறை அனுமதி அளித்துள்ளது.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்தில், 150க்கும் மேற்பட்ட வீடுகள், வனப்பகுதி அருகே அமைந்துள்ளன. அதனால் வனப்பகுதிகளில் சுற்றும் யானைகள், லிங்காபுரம் ஊருக்குச் செல்லும் சாலையை கடந்து, விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றன. மேலும் ஊரின் வடக்குப் பகுதியிலும், தெற்கு பகுதியிலும், அடர்ந்து வளர்ந்த முள் மரங்களில், இரவு தங்கிக்கொள்கின்றன.இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே, லிங்காபுரம் ஊரைச்சுற்றி அமைத்துள்ள அகழியை சீரமைக்கவும், ஊரின் தெற்கு பகுதியில் உள்ள முள் மரங்களை அகற்றவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறியதாவது: லிங்காபுரம் வடமேற்கு பகுதியில், அகழியை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் சாலையிலிருந்து, 10 மீட்டரில் உள்ள செடிகள் அனைத்தும், சுத்தம் செய்யப்படுகின்றன. மண்மூடி இருந்த அகழியை, மூன்று மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம், ஒரு மீட்டர் அடிப்பகுதியில் அகலம் இருக்கும்படி, சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.ஊரை சுற்றி அகழிகள் சீரமைக்கும் பணிகள் முடிந்தால், யானைகள் அகழியை தாண்டி ஊருக்குள் வர முடியாது. ஊரின் தெற்குப் பகுதியில் உள்ள முள் மரங்களை அடியோடு வெட்ட அனுமதி இல்லை. அதே நேரத்தில் மின்கம்பியில் உராயும், முள் மரங்களின் கிளைகளை அகற்ற மட்டும், அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மின்கம்பிகளில் உராயும் மரக்கிளைகளை மட்டுமே இயந்திரங்கள் மூலம், உடைக்க வேண்டும்.வேறு மரங்களை வெட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X