சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை இல்லை: போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 05, 2020
Advertisement

அன்னுார்:சம்பள பேச்சு வார்த்தைக்கு, நிர்வாகம் அழைக்காததை கண்டித்து, போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று, அன்னுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு போக்குவரத்து கழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களும், நிர்வாகமும் பேச்சு வார்த்தை நடத்தி, சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2016 ம் ஆண்டு, ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அது முடிந்து, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 2019ம் ஆண்டு செப். 1 முதல், புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் நான்கு மாதங்கள் கடந்தும், 15 வது சம்பள பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் அழைக்கவில்லை.இதையடுத்து அன்னுார், அரசு போக்குவரத்து கழக கிளை முன், நேற்று மதியம், கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு வையாபுரி தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முருகேசன் பேசுகையில், ''2016 ல் போட்ட ஒப்பந்தத்தில், இன்னும் பாக்கி தொகை தரப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில், 2019 ல் ஒப்பந்தம் முடிந்து, நான்கு மாதங்களாகியும், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் மவுனமாக உள்ளது,' என்றார்.சி.ஐ.டி.யு., நிர்வாகி பாலசுப்ரமணியம், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி பாரதி உள்பட பலர் பங்கேற்றனர். போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X