பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும்விழா

Added : பிப் 05, 2020
Advertisement
 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும்விழா

திண்டிவனம்:வானுார் தொகுதி கிளியனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்றார். கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலை வகித்தார்.விழாவில், சக்கரபாணி எம்.எல்.ஏ., மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.விழாவில், 11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1005 மாணவ, மாணவியர்களுக்கு 39 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் பக்தவச்சலம், கண்ணன், ராமதாஸ் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கெண்டனர்.தலைமையாசிரியர் நாகமணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X