பொது செய்தி

தமிழ்நாடு

மகா மாரியம்மன் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேகம்

Added : பிப் 05, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், காட்டூர் ரயில்வே கேட் அருகே, மிகவும் பழமையான மகா மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் கடைசியாக, 1994 ஆம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு தற்போது, கோவிலில் திருப்பணிகள் செய்து, கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.இதனை அடுத்து, இன்று காலை, 11 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன், பவானி ஆற்றில் இருந்து புனித நீரும், முளைப்பாரிகளையும், பக்தர்கள் எடுத்து வர உள்ளனர். பின்பு புனித நீரால் கோவில்களை சுத்தம் செய்து, முதல் கால வேள்வி பூஜையை துவங்க உள்ளனர்.ஆறாம் தேதி காலை, 9 மணிக்கு, கோபுரக் கலசங்கள் நிறுவி, தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாற்றப்பட உள்ளது. அதை அடுத்து இரண்டாம் கால வேள்வி நிகழ்வு நடைபெற உள்ளது.மாலையில் மூன்றாம் கால வேள்வியும், சுவாமி சிலையை நிறுவி, எண் வகை மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 7ம் ஏழாம் தேதி காலை, நான்காம் கால வேள்வி பூஜை அடுத்து, காலை, 8 மணியிலிருந்து 9 மணிக்குள் தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். சிறுமுகை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் கோபுர கலசத்திற்கும், மகாமாரியம்மனுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X