பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர்களுக்கு புத்தொளி பயிற்சி

Added : பிப் 05, 2020
Share
Advertisement

விழுப்புரம்:இந்து சமய அறநிலைய துறை விழுப்புரம் இணை ஆணையர் மண்டலம் சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி துவங்கியது.
விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த பயிற்சிக்கு, இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமை தாங்கினார். 42 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி மதியம் 2:00 மணி முதல் 3:30 வரை நடத்தப்படும்.நிகழ்ச்சியில், சைவ, வைணவ நுால்கள் குறித்தும், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிவப்புராணம் உட்பட பல புலவர்களின் வரலாறுகள், ஆலயங்களில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் செய்ய வேண்டிய பணிகள், பக்தர்களிடம் நடந்து கொள்ளும் வீதம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியை மயிலம் தமிழ்க்கல்லுாரி பேராசிரியர்கள் உதயகுமார், சிவசுப்ரமணியம், குமார், உமா ஆகியோர் அளிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X