பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் உணவுக்கூடம் அரசு பள்ளியில் உணவுக்கூடம் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு

Added : பிப் 05, 2020
Advertisement

அன்னுார்:அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி, 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு மாணவ, மாணவியர் மதிய உணவு அருந்த கட்டடம் இல்லை.வராண்டா மற்றும் புல் தரையில் அமர்ந்து உணவருந்துகின்றனர். இதை பார்த்த இப்பள்ளியில், 1969--70ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்த வசதியாக, 2,400 சதுரடி கட்டடம் கட்டித்தர முன் வந்தனர். இதற்கான பூமி பூஜை, நேற்று முன்தினம் நடந்தது. இதில், முன்னாள் மாணவர்கள், டாக்டர் கோவிந்தராஜ், கணேசன், சேதுபதி, சந்திரசேகரன் மற்றும் அவர்களுடன் படித்தோர், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X