ஜல்லிக்கட்டு மாடு இறப்பு போலீஸ் விசாரணை

Added : பிப் 05, 2020
Advertisement

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜல்லிக்கட்டு மாடு மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வ.புதுபட்டியை சேர்ந்தவர் பிச்சை 54.விவசாயி. இவர் ஆடு, மாடுகள் மற்றும் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள ஜல்லிக்கட்டு மாடும் வளர்த்து வருகிறார். ஜல்லிக்கட்டு மாட்டை வெங்கடேஷன் என்பவர் காட்டில் வைத்து பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு மாடு அருகிலுள்ள கவட்டை என்பவரது காட்டில் மேய்ந்துவிட்டது.

இதனால் பிச்சைக்கும், கவட்டைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாடு வயிறு ஊதி இறந்து கிடந்தது. வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X