பொது செய்தி

தமிழ்நாடு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 70 லட்சத்தில் முன்மண்டபம்

Added : பிப் 05, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில், 70 லட்சம் ரூபாய் செலவில், முன் மண்டபம் கட்டும் பணி நடக்கிறது.கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு, கருவறை முன் இருந்த, முன் மண்டபத்தின் மேற் கூரையில், விரிசல்கள் இருந்தன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோவில் நிர்வாகம், இந்த மண்டபத்தை இடித்தது.அதன் பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, முன் மண்டபம் கட்டாமல் இருந்தது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெயிலில் அம்மனுக்கு தீபம் ஏற்றி வந்தனர்.இந்நிலையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர், நன்கொடை மூலம், 70 லட்சம் ரூபாய் செலவில் முன் மண்டபம் கட்ட முன்வந்தார். தற்போது கோவிலில், கட்டுமான பணி நடக்கிறது. புதிதாக, 16 தூண்கள் அமைத்து, 25 அடி உயரத்திலும், 40 அடி அகலத்திலும், 60 அடி நீளத்திலும், முன் மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X