பொது செய்தி

தமிழ்நாடு

வாழை பயிருக்கு காப்பீடு தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள் ராபி பருவ வாழை பயிருக்கு, காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இயற்கை பேரிடர்களின் போது, விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் மகசூல், வருமான இழப்பினை ஈடு செய்ய பயிர் காப்பீடு அவசியமாகிறது. செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள் மானியம் பெறலாம். இதில், பயிர் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும், கடன் பெற்ற விவசாயிகள் கட்டாய அடிப்படையிலும், காப்பீடு செய்து பயன் பெறலாம்.நடப்பு ராபி பருவத்தில் அக்., முதல் மார்ச் மாதம் வரை சாகுபடி செய்யப்படும் வாழை மரங்களுக்கு, நிலம் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமின்றி, குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.இதற்காக, பிப்.,28 க்குள் விவசாயிகள் பிரீமியம் செலுத்த வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விபரங்களுக்கு, 0422 269 35 11 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோகிலா சக்தி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X