பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு நிலையத்தில் ஆபத்தான குடியிருப்பு : 10 ஆண்டுக்குப்பின் இடித்து அகற்றும் பணி துவக்கம்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 தீயணைப்பு நிலையத்தில் ஆபத்தான குடியிருப்பு : 10 ஆண்டுக்குப்பின் இடித்து அகற்றும் பணி துவக்கம்

உடுமலை;உடுமலை தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்திலிருந்த, ஆபத்தான பழைய அடுக்குமாடி குடியிருப்புகள், இடித்து அகற்றும் பணி துவங்கியுள்ளது.உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை செயல்படுகிறது. இது, 1931ம் ஆண்டு துவக்கப்பட்ட பழமையான தீயணைப்பு நிலையமாகும்.தற்போதுள்ள இடத்தில், 1944 ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும், நிலைய அலுவலர் மற்றும் வீரர்களுக்காக, ஒரு ஏக்கர் பரப்பளவில், 40 வீடுகள் கொண்ட, 11 இரண்டடுக்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு, 1983 மார்ச் மாதத்தில் திறக்கப்பட்டது.இந்த கட்டடம் கட்டப்பட்டு, 35 ஆண்டுக்கு மேலானதால், கட்டடங்கள் வலுவிழந்தும், விரிசல் விட்டும் எந்நேரமும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.ஆபத்தான குடியிருப்பில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், 2010ல், புதியதாக, 20 வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு அலுவலருக்கு என குடியிருப்பு கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.ஆனால், பழமையான குடியிருப்பு கட்டடங்கள், இடித்து அகற்றப்படாமல், 10 ஆண்டாக உள்ளது. பழைய குடியிருப்பு கட்டடம் மற்றும் பக்கவாட்டிலுள்ள சுவர்கள் உடைந்தும், கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்தும் காணப்படுகிறது.கட்டடங்களில் பெரும்பாலான பகுதிகள் உடைந்து, விரிசல் அதிகரித்து வருகிறது. சிலாப்கள் உடைந்து திடீர், திடீரென விழுந்து வருகிறது. கட்டடத்தின் அனைத்து பகுதிகளும் உடைந்து எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ள நிலையில், அருகிலேயே, தீயணைப்பு துறை அலுவலர் குடியிருப்பு மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.பழைய குடியிருப்பு கட்டடங்கள் பகுதிக்கு யாரும் செல்லாததால், புதர் மண்டியும், கட்டடங்களின் மேல், மரங்கள், செடிகள் முளைத்தும் ஆபத்தான நிலையில் இருந்தது.தீயணைப்பு துறையினருக்கும், சுற்றிலும் வசிக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும், பாழடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், தற்போது, பழைய கட்டடங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.அதிகாரிகள் கூறுகையில்,' ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள, இந்த பழைய குடியிருப்பு கட்டடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் அகற்றும் பணி முடிந்து விடும். விளையாட்டு மைதானம், பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகளுக்கானபூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X