காட்சிப்படுத்துதல் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்படுத்துதல் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Added : பிப் 05, 2020
Share
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த காட்சிப்படுத்துதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்து, பள்ளி வருகைப் பதிவை உயர்த்தும் நோக்கில் செயல்திட்டம் 'இம்பார்ட்'
 காட்சிப்படுத்துதல் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த காட்சிப்படுத்துதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்து, பள்ளி வருகைப் பதிவை உயர்த்தும் நோக்கில் செயல்திட்டம் 'இம்பார்ட்' செயல்படுத்தப்படுகிறது.இதில், 125 பள்ளிகளைச் சேர்ந்த 'இம்பார்ட்' செயல் திட்டத்திற்கான கல்வி மாவட்ட அளவில், பாடங்களின் வாரியாக முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான காட்சிப்படுத்துதல் போட்டி நேற்று நடந்தது.போட்டியில், 60 பள்ளி களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 120 மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலை பள்ளியில் நடந்தது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முதலிடத்தைப் பிடித்த 5 மாணவர்கள் மட்டும், நாளை 6ம் தேதி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., தொழில்நுட்ப பயிலகத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான காட்சிபடுத்துதல் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர்.நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர் துரை லோகியாபட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X