சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

Added : பிப் 05, 2020
Advertisement

விழுப்புரம்:நிலத்தகராறில் வாலிபரை தாக்கிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் பற்குணன் மகன் வீரமணிகண்டன், 25; இவரது 50 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சின்னசாமி மகன்கள் வெங்கடாசலம், 40; பழனிவேல், 38; ஆகியோர் பட்டா, சிட்டா மாற்றித்தர மறுத்தனர். இதனால், கடந்த 17ம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், அவரது மனைவி சிவகாமி, 35; மற்றும் பழனிவேல், அவரது மனைவி பூமாதேவி, 30; ஆகியோர் சேர்ந்து வீரமணிகண்டனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், வெங்கடாசலம் உட்பட 4 பேர் மீது காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X