சமத்துவபுரத்தில் பயன்பாடில்லாத நூலகம்: பொதுமக்கள் கடும் அதிருப்தி

Added : பிப் 05, 2020
Advertisement
 சமத்துவபுரத்தில் பயன்பாடில்லாத நூலகம்: பொதுமக்கள் கடும் அதிருப்தி

உடுமலை:உடுமலை சமத்துவபுரத்தில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட நுாலக கட்டடம் பயன்பாடில்லாமல், பூட்டியே கிடக்கிறது.உடுமலை, ஒன்றியம் கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில், நுாற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கான துவக்கப்பள்ளியும், அதில், 25 குழந்தைகளும் படிக்கின்றனர்.
சமத்துவபுரம் பகுதியில், அரசுப்பள்ளி வளாகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு, 2001ம் ஆண்டு, நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. நுாலகத்துக்கான கட்டடம் இன்றும் உள்ளது. ஆனால், நுாலக பயன்பாடாக இல்லாமல் கட்டடமாக மட்டுமே உள்ளது.பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் பூட்டி கிடக்கும் நுாலகம், தற்போது வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. புத்தகங்கள் இருக்க வேண்டிய நுாலகத்தில், சிமென்ட் மூட்டைகள், கட்டடப் பொருட்கள், சைக்கிள்கள் நிறுத்திக்கொள்வதற்கான இடமாகவும், குப்பைக் கழிவுகள் நிறைந்தும், பாழடைந்தும் உள்ளது. பள்ளி வளாகம் தற்போது நுாலகத்துடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு, நுாலகம் அருகில் இருந்தும், பயன்பாடில்லாமல் இருக்கும் நிலைதான் உள்ளது. நுாலகத்தில் புத்தகங்களுக்கு மாற்றாக, இத்தகைய பொருட்கள் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறையாக மாறி இருப்பதை குழந்தைகளும் பார்வையிடுகின்றனர்.
இதனால், நுாலகத்தின் முக்கியத்துவம் குழந்தைகளுக்கு தெரியாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.தவிர, இப்பகுதிகளிலிருந்து பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவர்களும், நுாலக பயன்பாட்டுக்கு அருகிலுள்ள ஊராட்சி அல்லது உடுமலை நகர் வரை செல்ல வேண்டும்.நுாலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என்பதே பெற்றோர், அப்பகுதியினரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் இப்பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X