சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோளத்தட்டு ஏற்றி வந்த லாரியில் தீ

Added : பிப் 05, 2020
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, சோளத்தட்டு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகே, கொங்கல்நகர் புதுார் பகுதியில், கனகராஜ் என்பவருக்கு சொந்தமான மினிசரக்கு லாரியில், வயல்களில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள தட்டுக்களை கால்நடை தீவனத்துக்காக ஏற்றிக்கொண்டு, பெதப்பம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி தாராபுரம் ரோட்டில், புதுார் அருகே நேற்று மதியம், 2:40 மணியளவில், மின்கம்பி உரசி லாரியிலிருந்த சோளத்தட்டு எரியத்தொடங்கியது. வேகமாக காற்றும் வீசியதால், மளமளவென்று தீப்பற்றி எரிந்தது.இதுகுறித்து உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில், மக்காச் சோளம் தட்டு முழுவதும் எரிந்து சாம்பலானது. லாரி 70 சதவீதம் சேத மடைந்தது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X