தேசிய ஹாக்கி போட்டி: நீலகிரி அணி வீரர்கள் பங்கேற்பு

Added : பிப் 05, 2020
Advertisement

குன்னுார்:நீலகிரி மாவட்ட ஹாக்கி அணி, உத்திரப்பிரதேசம் லக்னோவில் நடக்கும் போட்டிக்கு சென்றது.நீலகிரி மாவட்ட 'எஸ்.டி.டி., ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட்' சார்பில், கடந்த ஒரு மாதமாக குன்னுார் பகுதிகளில் ஹாக்கி பயிற்சி நடத்தி வருகிறது. இந்த அணியினர், குன்னுாரில் பயிற்சி முடித்து, ராமநாதபுரம் மாவட்டத்தில், செயற்கை புல்வெளி மைதானத்தில், கடந்த, 10 நாட்களாக பயிற்சி பெற்றனர்.பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களை, 'ஹாக்கி நீலகிரீஸ்' அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் தேர்வு செய்தனர். முதன்மை பயிற்சியாளராக சுரேஷ்குமார், உதவி பயிற்சியாளர்களாக, கிரி, கிறிஸ்டோபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த அணியில், வெடிமருந்து தொழிற்சாலை பள்ளி, அந்தோணியார் பள்ளி, பிருந்தாவன் பள்ளி, கிரசன்ட் பள்ளி மற்றும் கன்டோன்மென்ட் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், 2ம் தேதி துவங்கிய, 31வது, தேசிய ஹாக்கி போட்டியில் இந்த அணியினர் பங்கேற்க சென்றனர். 6ம் தேதி இந்த அணியினர், முதல் போட்டியில் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X