பொது செய்தி

தமிழ்நாடு

நில சர்ச்சையால் பாதிப்பு: கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

Added : பிப் 05, 2020
Advertisement
 நில சர்ச்சையால் பாதிப்பு: கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி:'தேனாடுகம்பையை சேர்ந்த நபர் குறித்து, நில பிரச்னை சம்பந்தாக, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,'என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேனாடுகம்பையை சேர்ந்த நபர் ஒருவரிடம், விவசாயிகள் சிலர் ,தோட்ட பத்திரத்தை அடமானம் வைத்து கிரையம் செய்து பணம் வாங்கியுள்ளனர். அவர், விவசாயிகளிடம் அதிகப்படியான வட்டிபணம் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.'அந்த நபர் மீது கடநாடு, தேனாடுகம்பை, அணிக்கொரை, தொரை அட்டி கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை,' என குற்றம் சாட்டப்பட்டுள்ளதுஇந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், நேற்று கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.மனு அளிக்கப்பட்ட ராணி, மீனாட்சி கூறுகையில்,''தேனாடுகம்பையை சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினோம். வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளோம். ஆனால், 'எங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்ய கூடாது,' என, பிரச்னை செய்து வருகிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய, கலெக்டரிடம் மனு அளிக்க வந்தோம்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X