சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த பாலத்தால் பாதிப்பு: சீரமைக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

கூடலுார்:கூடலார், ஓவேலி சேரன் நகரில், சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி, மக்கள் அரசு பஸ்சை, மூன்று மணி நேரம் சிறைப்பிடித்தனர்.கூடலுாரில், கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, பல பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது. ஓவேலி, சேரன் நகரில், பாலம் சேதமடைந்து, பெரியசோலை, எல்லமலை பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.இதனால், கூடலுாரிலிருந்து, சேரன் நகர் வரை அரசு பஸ் இயங்கி வருகிறது.பெரியசோலை, எல்மலை மக்கள் சேரன் நகர் வரை நடந்து வந்து, அங்கிருந்து பஸ் ஏறி பயணத்தை தொடர்கின்றனர். இத்தகைய சிரமத்தை தவிர்க்க,'சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பணிகள் துவங்கப்படவில்லை.இதனால், அதிருப்தி அடைந்த மக்கள்; மாணவர்கள், பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி நேற்று, காலை, 8:00 மணிக்கு சேரன் நகர் வந்த, அரசு பஸ்சை சிறை பிடித்தனர்.கூடலுார் தாசில்தார் சங்கீதாராணி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நசீன்சுல்தானா, டி.எஸ்.பி., ஜெய்சிங் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், 'பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று காலை ,11:00 மணிக்கு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பாலத்தை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 6ம் தேதி, டெண்டர் விடப்பட்டு, தொடர்ந்து பணிகள் துவங்கப்படும்,' என்றனர். இந்த சம்பவத்தால், மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X