பொது செய்தி

தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலையில் தரவிருது விழா

Added : பிப் 05, 2020
Advertisement
 கலசலிங்கம் பல்கலையில் தரவிருது விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குதர விருதுகள் வழங்கும் விழா நடந்தது.துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் பேசினர். ஆறுமுகம் பிரபு வரவேற்றார்.

பல்கலை தர உறுதி நிர்ணய துறை இயக்குனர் சிவப்பிரகாசம் தரம் விருது அறிக்கை சமர்ப்பித்தார்.158 ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் 13 பேர், சிறந்த பிராஜெக்ட்கள் செய்த 73 மாணவர்களுக்கும் துணைத்தலைவர் சசி ஆனந்த் சான்றிதழுடன் தர விருதை வழங்கினார்.

பயோ மெடிக்கல் துறை முதலிடம், பயோடெக்னாலஜி துறை இரண்டாமிடம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை மூன்றாமிடம் பெற்றன. கலை மற்றும் அறிவியல் துறையில் கணிதம் முதலிடம், கணினி பயன்பாட்டு துறையில் இரண்டாமிடம், இயற்பியல் துறை மூன்றாம் இடம் பெற்றன. துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் சான்றிதழ் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X