சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பகலில் செயின் பறிப்பு; பெண்களே உஷார்

Added : பிப் 05, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்து சென்ற பெண்ணிடம் பகலில் 3 பவுன்தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் கீழபுது தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி 57. மஞ்சப்பூ தெரு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் பகலில் தனது தெருவில் நடந்து வரும்போது பின்னால் வந்த மர்ம நபர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன்செயினை பறித்து சென்றுள்ளான்.

ஸ்ரீவில்லிபுத்துார் டவுண் போலீசாரின் உடனடி நடவடிக்கையாக அப்பகுதியை சேர்ந்த சேர்மதுரையை கைது செய்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஜி.ஓ., காலனியில் நள்ளிரவில் வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X