நிர்பயா வழக்கில் டில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (21)
Advertisement
நிர்பயா வழக்கில் டில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

இந்த செய்தியை கேட்க

புதுடெல்லி: டில்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மாறி மாறி, கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை அடுத்து, தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.





கடந்த 1-ம் தேதி திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், குற்றவாளிகளை டில்லி பாட்டியாலா செசன்சு கோர்ட் தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய,மாநில அரசுகள் சார்பிலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நிர்பயாவின் பெற்றோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தனர்.. அதில், 'குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு மனு மீது, டில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thangay -  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-202015:33:20 IST Report Abuse
thangay காலில் தான் தூக்கு போடணும்முன்னு தீர்ப்பு வரும் பாருங்க...
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
05-பிப்-202013:49:05 IST Report Abuse
Subburamu Krishnaswamy The convicts are the honorable VIP guests to the indian judiciary. Courts will give VIP status to such criminal guests.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-பிப்-202013:32:46 IST Report Abuse
Lion Drsekar ஒரு சமூக விரோதியை தண்டிக்க சட்டம் எவ்வளவு பயப்படுகிறது ? வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X