அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இது இன்டர்வெல் தான்; இனிமே தான் கிளைமாக்ஸ்' : உதயநிதி

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (73)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : ''குரூப் -4, குரூப் -2ஏ முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேசினார்.
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4, குரூப்- 2ஏ' முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி, தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், சென்னை, பாரிமுனையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நடிகரும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உதயநிதி பேசியதாவது:குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே, அரசு பணிகளில் இருப்பதை மாற்றி அமைக்கவே, டி.என்.பி.எஸ்.சி., ஏற்படுத்தப்பட்டது. ஆனால், தரம் கெட்ட இந்த அரசு, இதிலும் முறைகேடில் ஈடுபட்டுள்ளது. அரசு பணி என்பது, இளைஞர்களின் பெரிய கனவு. பல கனவுகளுடன், அரசு பணிக்கு முயற்சி செய்யும் இளைஞர்களுக்கு செய்த துரோகம் இது.தகுதியானவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, டி.என்.பி.எஸ்.சி., பணியமர்த்த வேண்டும். தரமான அதிகாரிகள் இருந்தால் தான், தரமான அரசு அமையும்; ஆட்சியும் நடக்கும்.
ஆனால், தமிழகத்தில் தரமற்ற ஆட்சி நடக்கிறது. குரூப்- 2 ஏ முறைகேட்டை அம்பலப்படுத்தியதே, தி.மு.க., தான். குரூப் -4, குரூப் -2ஏ முறைகேடு தொடர்பாக, முறையான விசாரணை நடக்க வேண்டும்; அதற்கு, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், தி.மு.க., தொடர் போராட்டங்களை நடத்தும். ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது; ஆனால், எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது என, அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அவர் பெயரிலுள்ள இடைத்தரகரை தான், போலீசார் தேடுகின்றனர்.
'கலெக் ஷன், கமிஷன், கரெப் ஷன்' ஆகிய, மூன்றுக்கும் மட்டுமே, இந்த அரசு செயல்படுகிறது. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், பிரதமர் மோடியின் எடுபிடியாக செயல்படுகின்றனர்.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றி, வெறும் இடைவேளை தான்; சட்டசபை தேர்தலில் தான், 'கிளைமாக்ஸ்' உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga Raj - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-202018:41:17 IST Report Abuse
Naga Raj வெள் சைட், பாபாவே மச்.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
05-பிப்-202016:25:34 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan முட்டாள் உதயநிதியே இட ஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர்கள்தான் ஊழல் செய்கின்றனர். நீ ஒதுக்கச் சொன்ன குறிப்பிட்ட ஜாதிக்காரன் அரசு வேலையில் இருந்தவரை ஊழல் இருந்ததில்லை. இவன் பாட்டன் பதவியேற்றதும் தமிழ்ப் குடிகார மாநிலமானது. ஊழலுக்கு வித்திட்டவர் உன் பாட்டன்தான்
Rate this:
Share this comment
Cancel
Arun -  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-202016:07:39 IST Report Abuse
Arun ivanukku cinema dialouge olunga pesa varaadhu. ivan ellam oru allu. Thiruttupaya.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X