டிரம்ப் உரையை கிழித்த சபாநாயகர் : அமெரிக்க பார்லி.,யில் பரபரப்பு

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (6)
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன் : அமெரிக்காவின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்பிற்கு, சபாநாயகர் நான்சி கைக்குலுக்க வந்தபோது, டிரம்ப் கைக்குலுக்க மறுத்துள்ளார். இதில் அதிருப்தியடைந்த நான்சி, உரை நகலை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் துவங்கும் என இருந்த சூழலில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 492 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், கூட்டு கூட்டத்தில் தனது 3வது உரையை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசை ஒழிக்க சீன அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து வகையிலான நடவடிக்கைகளையும் எனது நிர்வாகம் மேற்கொள்ளும்.. நமது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் எதிராகவும் எனது நிர்வாகம் கடுமையாக போராடி வருகிறது.
கடந்த வாரம் வரலாற்று சிறப்புமிக்க வகையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துடன் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஈரான் அரசு அணுஆயுதங்களை தேடுவதையும், பயங்கரவாதத்தை பரப்புவதையும் கைவிட்டு தனது சொந்த நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்க தொடங்க வேண்டும். ஈரானின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. நம்மால் அவர்களுக்கு நல்ல முறையில் உதவ முடியும். ஆனால் அவர்கள் முட்டாள்தனமாக உதவி கேட்காமல் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன் ஈராக் மற்றும் சிரியாவில் 20,000 ஐஎஸ்ஐஎஸ் படையினர் இருந்தனர். இன்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு 100 சதவீதம் அழிக்கப்பட்டு விட்டது. அதன் நிறுவனரும், தலைவருமான அல் பாக்தாதி இறந்துவிட்டான். இவ்வாறு டிரம்ப் பேசினார்.


உரை கிழிப்பு

டிரம்ப் உரையாற்றிய பிறகு, சபாநாயகர் நான்சி கைக்குலுக்க வந்தபோது, டிரம்ப் கைக்குலுக்க மறுத்துள்ளார். இதில் அதிருப்தியடைந்த நான்சி, உரை நகலை கிழித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-பிப்-202002:01:18 IST Report Abuse
Rajagopal டிரம்ப் கூட இருப்பவர்கள் இன்னும் சட்டையைக் கிழித்துக் கொள்ளாததுதான் ஆச்சரியம்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
05-பிப்-202016:50:10 IST Report Abuse
தமிழர்நீதி சபாநாயகர்கள் ஆளும் கட்சிக்கு ஜால்றா போடுபவர்கள் என்பது உலக நடத்தை . எதிர் காட்சிகள்தான் பொதுவாக உரையை , வேட்டியை , சட்டையை கிழிப்பார்கள். இங்கு ஒரு சபாநாயகர் கிழிக்கிறார். இதுதான் ஜனநாயகத்தின் உச்சம் .
Rate this:
Share this comment
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
06-பிப்-202006:01:38 IST Report Abuse
GopalDon't just generalize and make a conclusion. Just fyi... She is from the opposition party i.e. Democratic party....
Rate this:
Share this comment
Cancel
05-பிப்-202013:16:30 IST Report Abuse
என்பிஆர் நான்சி கிழித்ததென்னவோ உண்மை, ஆனால் கை கொடுக்க ஒன்றும் வரவில்லையே!
Rate this:
Share this comment
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06-பிப்-202001:43:01 IST Report Abuse
naadodiState of the union address க்கு முன்பு நான்சி காய் குலுக்க வந்த பொது ட்ரம்ப் மறுத்து ஒதுக்கினார் ..அதுதான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X