பொது செய்தி

தமிழ்நாடு

'ஓம் நமச்சிவாய' கோஷம் முழங்க கோலாகலமாக நடந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
தஞ்சை: ஆயிரக்கணக்கான பக்தர்களின் "ஓம் நவச்சிவாய" கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது.உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடந்தது. இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அறநிலையத் துறை என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை

இந்த செய்தியை கேட்க

தஞ்சை: ஆயிரக்கணக்கான பக்தர்களின் "ஓம் நவச்சிவாய" கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது.latest tamil newsஉலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பின் புதனன்று சிறப்பாக நடைபெற்றது. இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத் துறை என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். டிசம்பர் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடந்தது. இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அறநிலையத் துறை என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். கும்பாபிஷேகத்துக்காக கடந்த மாதம் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும் 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

பிப். 1ல் புனித நீர் அடங்கிய குடங்கள் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நேற்று காலை ஆறாவது கால யாகசாலை பூஜையும் மாலை ஏழாவது கால யாகசாலை பூஜையும் நடந்தன. யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்ஸவ மூர்த்திகள், எட்டு பலி பீடங்கள், 10 நந்தி, 22 கோவில் கலசம் என 405 சுவாமிகளுக்கும் 705 குடங்களை வேதிகையில் வைத்து வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4:30 மணிக்கு எட்டாவது கால யாகசாலை பூஜையும், நாடி சந்தனமும், மகா பூர்ணாஹுதி தீபாராதனை, யாத்ரா தானமும் நடந்தது..


latest tamil news


காலை, 7:25 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து, புனித நீர் குடங்கள் புறப்பட்டது. காலை, 9:30 மணிக்கு ராஜகோபுரத்திற்கும், அதனைத் தொடர்ந்து பெரிய கோவில் விமான மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும்; இரவு, பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும் நடக்கின்றன.

தமிழிழும், சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் ஓத நடந்த கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனம். ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்ட போது பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-பிப்-202014:27:44 IST Report Abuse
Natarajan Ramanathan RAMAKRISHNAN NATESAN , Bangalore - விளம்பரம் வரும்போது வேறு வேறு சேனல்கள் மாற்றி பார்ப்பதில்லையா?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
05-பிப்-202019:19:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     கண்டிப்பா எந்த எந்த கோயில்களில் எது கிடைக்கும் என்று அலைவதை போல் இருக்கட்டும் தவறில்லை...
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் விமானம் முழுவதும் தங்க கவசம் செய்யப்ப பட்டுந்ததாக தகவல் சொல்கிறார்கள் மீண்டும் தங்க கவசத்துக்கு ஏற்பாடு செய்ய முயலுவோம் செய்வதை திருந்தச் செய்வோம்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-பிப்-202015:56:13 IST Report Abuse
dandyபழைய கலசத்தில் பெரிய ஒடடை இருந்ததாக சொன்னார்கள் கரணம் ..கழுகு கொத்தியதாம் ...எப்படி ? ஹி ஹி ஹி...
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
05-பிப்-202013:56:35 IST Report Abuse
svs " இம்மாபெரும் விழாவை எந்த சிறு பிழை இல்லாமல் நடத்த ஏற்பாடுகள் செய்த தஞ்சை அரண்மனை பரம்பரை அறங்காவலர் திரு சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே தலைமையில் அமைந்த தேவஸ்தான குழு " ..................தமிழ் , தமிழன் , தமிழன்டா .........
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-பிப்-202015:57:48 IST Report Abuse
dandyராஜா போன்ஸ்லே ஒரு தமிழர் ..புல்லரிக்கின்றது என் இந்த அறங்காவலர் வேளைக்கு டாஸ்மாக் நாட்டில் டொமிழர் ஒருவர் தகுதியில்லை ???...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-பிப்-202016:46:48 IST Report Abuse
dandyபரம்பரை அறங்காவலர் ..அப்படியானால் ராஜா ராஜ சோழன் வழித்தோன்றல்கள் ?????...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-பிப்-202016:48:37 IST Report Abuse
dandyஉண்மையில் சோழ மன்னர்களுடைய உறவு குடும்பம் ஒன்று இன்றும் ஏழ்மையில் வாழ்வதாக பல செய்திகள் வந்துள்ளன ..இந்த குடும்பத்தை ..கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அழைத்தார்களா ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X