பொது செய்தி

தமிழ்நாடு

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தஞ்சை பெரிய கோவில்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் தஞ்சாவூர் பெரிய கோவிலும் இடம்பிடித்துள்ளது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா இன்று (பிப்.,05) கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குடமுழுக்கு விழாவை தரிசித்தனர். சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் தஞ்சாவூர் பெரிய கோவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.
#ThanjavurBigTemple என்ற பெயரில் ஹேஷ்டாக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 3500 க்கும் அதிகமானவர்கள் கருத்து பதிவிட்டும், குடமுழுக்கு தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள், தஞ்சை பெரிய கோவிலின் போட்டோ ஆகியவற்றை பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
05-பிப்-202020:36:09 IST Report Abuse
M.COM.N.K.K. தில்லை ஸ்ரீ நடராஜரும் தஞ்சை ஸ்ரீ சிவனும் ஒன்றுதானே என்று தெரியாதோ தஞ்சை தில்லை இரண்டும் ஒன்றுதான் சரிதானே சிவ சிவ
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
05-பிப்-202014:16:02 IST Report Abuse
Ray மெய்சிலிர்த்த ப்ரஹதீஸ்வரர் தரிசனம் 1971 தலை தீபாவளி சமயம் புது மணமக்களாக சென்றோம் என் மாமனார் “பெரியகோயில் போகலாமா” ன்னு கேட்டார் சரியன்று கிளம்பினோம் அவருக்கு கோயில் அதிகாரிகள் தெரிந்தவர்களாய் இருந்தார்கள் எங்களுடன் வந்து தரிசனம் செய்து வைத்தார்கள் நின்று நிதானமாக தரிசனம் முடிந்து என் மாமனார் ஒரு அதிகாரியிடம் எதோ சொல்ல இதோ வருகிறேன் என்று சொல்லி போனவர் இன்னும் ஒருவரை அழைத்துவந்து பூட்டுகளை திறந்து படியேறி எங்களை அழைத்து போனார்கள் கர்பகிரஹத்தின் மேலே கோபுரத்தின் உள்புறமாக வலம் வரும் பாதை ஒட்டி சுற்று சுவரில் வரிசையாக எண்பத்தோறு நாட்டிய முத்திரைகளை சிற்பங்களாக முழுமையாக செதுக்கியுள்ளனர் மீதமுள்ள இருபத்தேழு செதுக்காமல் நின்று போயுள்ளது (மொத்தம் நூற்றியெட்டில் முக்கால் பங்கு எண்பத்தொன்று மீதம் கால் பங்கு இருபத்தேழு) மேலே கோபுரத்தின் உள்கூட்டை உச்சி வரை காணும்படியாக மின் விளக்குகளை போட்டார்கள் அம்மாடியோவ் எத்தனை உயரம் என்று வியந்து பார்த்தேன் கீழே குனிந்து பார்த்தால் மூலவர் லிங்கம் ப்ரஹதீஸ்வரர் மெய்சிலிர்க்க தரிசித்து விட்டு கோயில் அதிகாரிகளுக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என்று ஈசனை போற்றினேன்
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
05-பிப்-202014:58:46 IST Report Abuse
dandyஆனால் கோயில் நிர்வாகம் எல்லாம் மராட்டியன் கையில் ..வெட்க கேடு...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
05-பிப்-202019:31:19 IST Report Abuse
Rayதஞ்சையை மராட்டியர்கள் வென்று ஆண்டார்கள் சரஸ்வதி மகால் நிறுவினார்கள் அரண்மனை மண்டபத்தில் உள்ள சிலைகள் மதிப்பிட முடியாதவை அதன் மகிமை இன்றும் எத்தனை பேருக்கு தெரியும் தஞ்சையை சுந்தர பாண்டியன் யாரும் மீட்க வில்லை என்பது சோகமே...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-பிப்-202012:54:29 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த களேபரத்தில் இன்று அருமையான தில்லை நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததே நிறைய பேருக்கு தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X