பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: பிரதமர் தகவல்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டு விட்டதாக லோக்சபாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அப்போது இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் என்றார்.latest tamil news


அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளை கவனிக்க 3 மாதங்களுக்குள் அறக்கட் டளை அமைக்கும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நவம்பர் 9ல் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அரசு உருவாக்கியிருப்பதாக லோக்சபாவில் பிரதமர் மோடி அறிவித்தார்.

லோக்சபாவில் மோடி தனது உரையில், அயோத்தியில் வஹ்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா' என பெயரிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் அமைய உள்ளது. ராமர் கோயில் அமைப்பதற்கான திட்டம் தயாராக உள்ளது.


latest tamil newsஇந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம், புத்த மதம், பார்சி அல்லது ஜெய்ன் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி அவசியம். அனைவருக்கும் வளர்ச்சி என்பதை கொள்கையாகக் கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது, என்றார்.

ராமர் கோயில் அறக்கட்டளை குறித்த அறிவிப்பை மோடி வெளியிட்ட போது அவையில் அமளி ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர் ஆதரித்து கோஷமிட்டனர்.


டில்லியில் அலுவலகம்

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அலுவலகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.


மசூதிக்கு நிலம் ஒதுக்கியது உ.பி., அரசு


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அயோத்தியில் இருந்து 18 கி.மீ., தொலைவில், லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கு உ.பி., அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக உ.பி., அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், மசூதிக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக 3 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். இந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்த பின்னர், மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த இடத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது. அங்கு மத நல்லிணக்கம் நிலவுவதுடன், சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
05-பிப்-202017:08:42 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் மோடி என்னதான் கூறினாலும் இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட சிலருக்கு, முக்கியமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை வரவே வராது. அவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால், காங்கிரஸ் - திரிணாமுல் போல ஒத்து ஊத வேண்டும். இது ரெண்டுமே நடக்கபோவது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
05-பிப்-202017:07:08 IST Report Abuse
Nathan இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் என்றார் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் தீவிர பின்தன்மையும், யானைகள் போல 5, 10 வர்ஷித்துக்கோ வாழ்க்கை முழுத்தமுக்கோ ஒரே குழந்தை பெரும் மிருது மக்களுக்கும் வித்தியாசம் கிடையாதோ. சரித்திரமே, குட்டி போடு, கொள்ளையடி, கொலை சித்து நாட்டை பிடிதானே கண்டிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-பிப்-202016:06:50 IST Report Abuse
Endrum Indian இந்தியா அனைவருக்குமானது. தவறு. இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமே, நான் முஸ்லீம் மட்டும் தான் என்று சொல்பவர்களுக்கு அல்லவே அல்ல என்று சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X