அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: பிரதமர் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: பிரதமர் தகவல்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (39)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டு விட்டதாக லோக்சபாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அப்போது இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் என்றார்.



latest tamil news


லோக்சபாவில் மோடி தனது உரையில், அயோத்தியில் வஹ்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா' என பெயரிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் அமைய உள்ளது. ராமர் கோயில் அமைப்பதற்கான திட்டம் தயாராக உள்ளது.


latest tamil news



இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம், புத்த மதம், பார்சி அல்லது ஜெய்ன் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி அவசியம். அனைவருக்கும் வளர்ச்சி என்பதை கொள்கையாகக் கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது, என்றார்.

ராமர் கோயில் அறக்கட்டளை குறித்த அறிவிப்பை மோடி வெளியிட்ட போது அவையில் அமளி ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர் ஆதரித்து கோஷமிட்டனர்.


டில்லியில் அலுவலகம்

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அலுவலகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.


மசூதிக்கு நிலம் ஒதுக்கியது உ.பி., அரசு


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அயோத்தியில் இருந்து 18 கி.மீ., தொலைவில், லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கு உ.பி., அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக உ.பி., அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், மசூதிக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக 3 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். இந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்த பின்னர், மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த இடத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது. அங்கு மத நல்லிணக்கம் நிலவுவதுடன், சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X