அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (139)
Share
Advertisement
சென்னை: சிஏஏ சட்டம் குறித்து பீதி கிளப்பப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.துாத்துக்குடியில் உள்ள, 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக, நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை
Rajinikanth, CAA, NPR, NRC, Muslim, ரஜினி, ரஜினிகாந்த், சிஏஏ, குடியுரிமைசட்டம், முஸ்லிம், என்பிஆர், என்ஆர்சி

இந்த செய்தியை கேட்க

சென்னை: சிஏஏ சட்டம் குறித்து பீதி கிளப்பப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடியில் உள்ள, 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக, நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்ற ரஜினி, 'வன்முறை நிகழ்ந்ததற்கு, சமூக விரோதிகளே காரணம்' என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ரஜினி தெரிவித்த கருத்துக்கு அவர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, விசாரணை கமிஷன் 'சம்மன்' அனுப்பியதாக கூறியது.


Superstar Rajnikanth says NPR is essential to find out foreign nationals.

latest tamil newsஇந்நிலையில், இன்று ரஜினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். சிஏஏ.,வால் முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என ஒருவித பீதியை கிளப்பியுள்ளனர். ஆனால், இங்குள்ள முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்மபூமி என இங்கேயே வாழும் முஸ்லிம்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? சிலர் சுயலாபத்திற்காக தூண்டி விடுகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக களத்தில் இறங்கி நானே போராடுவேன்.


latest tamil news


தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். என்பிஆர் முக்கியம் மற்றும் அவசியம். மக்கள் தொகை பதிவேடு இருந்தால் தான் யார் வெளிநாட்டவர்கள் என்பது தெரிய வரும். என்ஆர்சி இன்னும் அமல்படுத்தவில்லை; ஆராய்ந்து வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கும்போது, அந்த பிரச்னையை தீர ஆராய்ந்து பின்னர் போராடுங்கள். நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் என்பது வருமான வரித்துறைக்கே தெரியும். சட்ட விரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலைகாண் - சென்னை,இந்தியா
09-பிப்-202012:00:06 IST Report Abuse
சுடலைகாண் மிக சரியான கருத்து. தமிழ் நாட்டில் இந்த caa வை வைத்து திமுக பெரும் புரளியை கிளப்பி வருகிறது. திமுக ஊடகங்களும் முரசொலி குரூப்ஸ்சும் சேர்ந்து என்னமோ முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற போற மாதிரி பில்டப் குடுக்குறானுக. caa சட்டமாகி 1 மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. ஆனா எந்த இந்திய முஸ்லிமகளுக்கும் பாதிப்பு இல்லை. இந்த உண்மையை மறச்சு அரசியல் aadt
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
06-பிப்-202011:49:07 IST Report Abuse
Raja ஆன்மிகம் பேசிக்கொண்டு வட்டி தொழில் செய்பவரை என்ன சொல்வது.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-பிப்-202000:40:15 IST Report Abuse
Rajagopal CAA வால் எண்ணற்ற முஸ்லிம்கள் முஸ்லீம் நாடுகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வந்து குடியேறி பெரும்பான்மையினராக மாற்ற விடாமல் இந்த சட்டம் தடுக்கிறது. அதனால்தான் மத சார்பற்ற, நேர்மையையும், தருமத்தையும் காக்க, சுடலை, சீமான், மமதா, ராவுல், பினராயி என்று பல உலக தலைவர்கள், கம்யுனிஸ்டுகளுடன் கைகோர்த்து வன்முறையின்றி நாடெங்கிலும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது பண்பாடு அடிமைப்பட்டுக் கிடப்பதே என்ற பாரம்பரிய கொள்கையை நிலை நாட்டை இவர்கள் தங்களையே தியாகம் செய்து கொண்டிருக்கையில், எங்கிருந்தோ வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து, சினிமாவில் எல்லோரையும் கீழே தள்ளி, மேலே உட்கார்ந்திருக்கும் ரஜனி இதை எதிர்ப்பது வியப்பளிக்கிறது என்கிறார் உதய நிதி அவர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இன்னும் நிறைய பேர் வந்தால், அதுவும் இந்த இஸ்லாமிய நாடுகளில் தவிக்கும் முஸ்லிம்கள் வந்தால் வெற்றி நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே என்று கனிமொழி முழங்கினார். அண்ணா அறிவாலயத்திற்கு கிழக்கு மெக்கா என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார் பெருந்தலைவர் வைகோ அவர்கள். ரொஹிங்கியாக்களின் அவதி, கொரோனா வைரஸ் வந்ததால் படும் அவதியைப் போலத் தாங்க முடியாத இன்னலைக் கொடுக்கிறதென்றார் அண்ணன்சுபவீ. அந்த வைரஸை விடக் கொடுமையானது பாஜக ஆட்சி என்கிறார் கமல ஹாசன். அனைவருக்கும் பிரியாணி அளிக்கப்பட்டது.
Rate this:
Sundar - Madurai,இந்தியா
06-பிப்-202008:52:50 IST Report Abuse
SundarMuslim brothers if they are affected in Islamic countries why India has to accept? These affected Muslims can be migrated to Muslim countries in gulf, Afghanistan, Indonesia, Pakistan, Malaysia, Iran, Iraq, Syria and in Africa. The opposition by DMK, Congress and other parties are against Indian security for political gain....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
06-பிப்-202009:46:27 IST Report Abuse
Amal Anandan//போராட்டமே தப்புனு சொன்னது ரஜினி. இப்போ சொல்றாரு அவரே போராடுவாராம். மாற்றி மாற்றி பேசுகிறார்....
Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
06-பிப்-202010:34:49 IST Report Abuse
SARAVANAN Gமுழுவதும் சந்திரமுகியாக மாறி நிற்கும் கங்காவை தமிழ் நாட்டு மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர் ,.... இவருடைய சாயம் மிக விரைவில் வெளுக்க போகிறது ......
Rate this:
சுடலைகாண் - சென்னை,இந்தியா
09-பிப்-202011:48:07 IST Report Abuse
சுடலைகாண்Anandan - Chennai,இந்தியா .................பேட்டியை ஒழுங்கா பார்த்து கருத்து சொல்லுங்க. முதல் ஆளாக குரல் கொடுப்பேன் அப்டீனுதா சொல்லிருக்கார். திமுக ஊடகங்களை போல பொய் செய்தியை பரப்பாதீர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X