ராமர் கோயில் அறக்கட்டளை : தலைவர்கள் கருத்து

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பை லோக்சபாவில் இன்று பிரதமர் மோடி வெளியிட்டார். 15 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த அறக்கட்டளையில் பீகாரை சேர்ந்த ஒருவரும் உள்ளதாக தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.






ராமர் கோயில் அறக்கட்டளை குறித்த அறிவிப்பு குறித்து தலைவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதன் விபரம் :
சிவசேனா சஞ்சய் ராவத் : மஹாராஷ்டிர முதல்வர் சார்பில் பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். ஆனால் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவு. அதனை மதிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.




ஏஐஎம்ஐஎம் அசாசுதீன் ஓவைசி : பார்லி., கூட்டத் தொடர் பிப்.,11 ம் தேதி தான் முடிகிறது. இந்த அறிவிப்பினை பிப்.,8 ம் தேதிக்கு பிறகு வெளியிட்டிருக்கலாமே. டில்லி தேர்தல் குறித்து பா.ஜ., கவலையில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

உமாபாரதி : இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அறக்கட்டளையில் எங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. இதில் மீண்டும் எங்களை இணைத்து கொள்ள நானும் அத்வானியும் தயாராக உள்ளோம். எங்களால் முடிந்தவற்றை செய்வோம். இதற்காக எங்களை தூக்கில் போட்டாலும் அதற்கு தயாராக உள்ளதாக ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
 இந்தியன் கோட்சே இராமர் கோயில் இருக்கட்டும், நம் நாட்டில் மன்னராட்சி எப்போது வரும்? பொருளாதாரம், கொரோனா வைரஸ் நிலவரம் என்ன நிலை. சற்று அதைப்பற்றி பேசலாமா?
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-பிப்-202018:24:42 IST Report Abuse
Malick Raja நீதியை யாராலும் மறுக்கவே முடியாது .. நீதியை மறைந்தவர்கள் அதற்க்கு துணை போவோர் யாராக இருந்தாலும் அதற்குரிய விளைவினை அனுபவித்தே ஆகவேண்டும் .. நீதி என்பதை மறுப்பவர்கள் ,மறைப்பவர்கள் ,உதாசீனப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் (மதமோ ,ஜாதியோ ,உறவுகள், தனிமனிதனோ ,கூட்டமோ அல்லது கூட்டங்களோ , ஒரு நாடோ ,அல்லது நாடுகளோ எதற்கும் விதிவிலக்கில்லை) தப்பவே முடியாது ..
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
05-பிப்-202017:44:16 IST Report Abuse
Nagarajan D ஒவாய்சி எனும் தீவிரவாதியின் கருத்து யாருக்கு தேவை. ஹிந்துக்களுக்கு தொடர்புடைய விஷயங்களில் இஸ்லாமியர்களுக்கு என்ன கருத்து இருந்தால் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X