வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிர்பயா வழக்கில், ஒரே வழக்கு ஒரே தண்டனை என்பதால், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட அனுமதிக்க முடியாது எனவும் டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேல்முறையீடு
டில்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன்குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மாறி மாறி, கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்ததை அடுத்து, தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 1-ம் தேதி திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், வினய் குமார் கருணை மனு தாக்கல் செய்ததால், 4 பேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மறு உத்தரவு வரும் வரை 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அவர்களை தனித்தனியாக தூக்கில் போட அனுமதி கோரியும் மத்திய அரசு மற்றும் திஹார் சிறை நிர்வாகம் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கெடு
இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்ட் பிறப்பித்த உத்தரவு: ஒரே வழக்கு, ஒரே தண்டனை என்பதால் தனித்தனியாக தூக்கில் போட அனுமதி தர முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் என்பதால், தனித்தனியாக தூக்கில் போட அனுமதிக்க முடியாது. 4 பேரையும் ஒரே நேரத்தில் தான் தூக்கிலிட வேண்டும். 4 பேரும் தாமதமாக சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். 4 பேரும், அனைத்து சட்ட நிவாரணங்களையும் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். சட்ட நிவாரணங்களை காரணம் காட்டி குற்றவாளிகள் காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு
டில்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE