பொது செய்தி

தமிழ்நாடு

விஜய்யை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமானவரித்துறை: மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (50)
Advertisement
actorvijay, Master, vijay, ITRaid, ITofficers, Thalapathy, Bigil, AGSentertaintment, நடிகர்விஜய், விஜய், வருமானவரித்துறை, படப்பிடிப்பு, மாஸ்டர்,

நெய்வேலி : மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்னை அழைத்து சென்றனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

‛பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛மாஸ்டர்' படத்தில் நடிக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி., 2வது சுரங்கத்தில் நடக்கிறது.

இந்நிலையில் ‛பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திகு சொந்தமான இடங்களில் இன்று(பிப்., 5) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விஜய்யையும் விசாரிக்க வேண்டும் என கூறி உதவி கமிஷனர் கிருஷ்ணகாந்த் தலைமையிலான அதிகாரிகள், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.





படப்பிடிப்பு முடிந்ததும் வருவதாக விஜய் கூறியிருக்கிறார். ஆனால் , இதனை ஏற்காத அதிகாரிகள், உடனே வர வேண்டும் என கூறினர். இதையடுத்து விஜய், அதிகாரிகளிடம் நீங்கள் போங்கள் நான் எனது காரில் வருகிறேன் என கூறியிருக்கிறார். இதையும் ஏற்காத அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்த இன்னோவா காரில் விஜய்யை விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.


விஜய் வீட்டிலும் ரெய்டு

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள மற்றோரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பிகில் திரைப்படத்திற்கு ஏ.ஜி.எஸ்., நிறுவனத்திடம் இருந்து விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
06-பிப்-202000:53:13 IST Report Abuse
jagan மத மாற்ற கூட்டத்தோடு தொடர்பு இருப்பதால் தான் பிடித்தார்கள்
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-202020:39:49 IST Report Abuse
Janarthanan இவனும் நம்மளை போல் இந்தியாவில் இருக்கும் ஆளு ??? எதற்கு இவனுக்கு பில்ட் அப் ??? விசாரணைக்கு கூப்பிட்டா போக வேண்டியது தானே ???
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
06-பிப்-202000:08:27 IST Report Abuse
Anandanசொம்படிக்குறவனுக்கு வருமானவரியை ரத்து செய்றதும், அதை செய்யாம நழுவுரவனுக்கு இப்படி சோதனை போடுறதுக்கு நாம இந்த ஆறு வருடத்தில் பார்க்காததா?...
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
05-பிப்-202020:33:39 IST Report Abuse
dinesh இது சும்மா, வெள்ளைல வாங்குனியா, கறுப்புல வான்குனியான்னு விசாரிச்சிருப்பாங்க, ரெய்டு இவருக்கில்ல, தயாரிப்பு நிறுவனத்துக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X