தமிழ்நாடு

7 ஆண்டு மின்சார பிரச்னைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைத்தது

Added : பிப் 05, 2020
Advertisement

திருச்சி : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மணப்பாறை அருகே உள்ள இரு கிராமங்களுக்கு, ஒரே நாளில், 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கப்பட்டு, மின்வினியோகம் வழங்கப்பட்டது.

திருச்சி, மணப்பாறை அருகேயுள்ள கூடத்திப்பட்டி மற்றும் கணக்கப்பிள்ளையூரில் சீரான மின்சாரம் பெற, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதற்காக, ஏழு ஆண்டுக்கு முன், மின்வாரியத்துக்கு, 3 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' தொகையும் கட்டப்பட்டது. உடனடியாக மின்கம்பம் அமைத்த மின்வாரிய அதிகாரிகள், அதன் பின், 'டிரான்ஸ்பார்மர்' அமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டனர்.ஏழு ஆண்டாகியும், டிரான்ஸ்பார்மர் அமைக்காத, மின்வாரியத்தை கண்டித்து, விவசாயிகள், கடந்த, 1ம் தேதி, மின்கம்பத்துக்கு இறுதி சடங்கு நடத்தி, எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு முதல், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை பணிகள் முடிந்து, உடனே மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. இதனால் கூடத்திப்பட்டி, கணக்கப்பிள்ளையூர் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:ஏழு ஆண்டுகளாக, மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த பலனும் இல்லை.'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், போர்க்கால அடிப்படையில், ஒரேநாளில், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இரு கிராமங்களின் மக்கள், விவசாயிகள் சார்பில், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X