கள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தல்

Added : பிப் 05, 2020
Share
ஆத்துார்: கள்ளச்சாராயம் காய்ச்ச, வெல்லம், கடுக்காய் கடத்தலுக்கு பயன்படுத்திய, மினி லாரியை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல், சிறுவாச்சூர், எலந்தவாரி காப்புக்காடு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, ஆத்துார் வனச்சரகர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வந்த, 'ஈசர்' மினி லாரியை நிறுத்தினர்.

ஆத்துார்: கள்ளச்சாராயம் காய்ச்ச, வெல்லம், கடுக்காய் கடத்தலுக்கு பயன்படுத்திய, மினி லாரியை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல், சிறுவாச்சூர், எலந்தவாரி காப்புக்காடு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, ஆத்துார் வனச்சரகர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வந்த, 'ஈசர்' மினி லாரியை நிறுத்தினர். டிரைவர் இறங்கி, வனப்பகுதி வழியாக தப்பியோடினார்.

அந்த வாகனத்தை சோதித்ததில், கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக, வெல்லம் - 20 மூட்டை, கடுக்காய் - 10 கிலோ கடத்தி சென்றது, தெரிய வந்தது.அந்த பொருட்களுடன், வாகனத்தையும், ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம், வனத்துறையினர் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X