தமிழ்நாடு

2 முதியோர் அடித்து கொலை: சேலத்தில், 'சைக்கோ' பீதி

Added : பிப் 05, 2020
Advertisement

சேலம்: இரு முதியோர் அடித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து, 'சைக்கோ' வாலிபர் உலாவுகிறாரா என, சேலத்தில் பீதி கிளம்பியுள்ளது

.சேலம், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் அருகே, நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, வடமாநில முதியவரை, ஒரு வாலிபர் கல்லால் தாக்கி கொன்று, பணத்தை கொள்ளையடித்தார்.இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:50 மணிக்கு, பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த அங்கமுத்து, 85, என்பவர், பழைய பஸ் நிலைய வணிக வளாகத்தில் துாங்கிக்கொண்டிருந்தார்.கல்லால் தாக்கி, அங்கமுத்துவை கொன்ற வாலிபர், அவரிடம் இருந்து பணத்தை எடுத்துச்சென்றார்.

இதன், 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும், டவுன் போலீசார் ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.முதியோர் கொலை செய்யப்படும், 'சிசிடிவி' காட்சிகள், சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொலையாளியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர், 'சைக்கோ' போன்று தெரிகிறது. அவர் குறித்த தகவல் அறிந்தால், சேலம் மாநகர போலீசை, 100, 94981 00945, 0427 - 2220200 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X