பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் வெயில் வறண்டது வைகை

Added : பிப் 05, 2020
Advertisement

தேனி: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வைகை ஆறு, நீர் வரத்தின்றி வறண்டுள்ளது.

இதனால், மலைக் கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.தேனி மாவட்டம், கடமலை- - மயிலை ஒன்றியத்தில், கண்டமனுார், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட, 18 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 180 மலை கிராமங்களில் வசிப்போருக்கு, வைகை ஆற்றில் கிணறு அமைத்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இப்பகுதியில், சில வாரங்களாக, மழையின்றி வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்து, கடமலைக்குண்டு, கண்டமனுார் பகுதியில் ஆறு வறண்டுள்ளது. இதனால், இக்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X