தமிழ்நாடு

போக்கு காட்டும் சிறுத்தை மற்றொரு இடத்தில் கூண்டு

Added : பிப் 05, 2020
Share
Advertisement

கோபி: டி.என்.,பாளையம் பகுதியில், ஆடு, நாய், கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை, கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மேலும் ஒரு கூண்டு வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் அருகே கொங்கர்பாளையம், கொழுஞ்சிக்காட்டை சேர்ந்தவர் ராசன். இவருடைய தோட்டத்தில், ஆடு மற்றும் நாயை, நான்கு நாட்களுக்கு முன், சிறுத்தை கடித்துக் கொன்றது. இதையடுத்து அப்பகுதியில், டி.என்.,பாளையம் வனத்துறையினர், கூண்டு வைத்தனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, கேமராக்களும் அமைத்தனர். ஆனாலும், எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் பெரியகொடிவேரி கிராமத்தில், பீட்டர் என்பவரின், இரண்டு மாத பசுங்கன்றை, சிறுத்தை தாக்கி கொன்றது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில், எட்டு இடங்களில், வனத்துறையினர் கேமரா பொருத்தினர். நேற்று காலை ஆய்வு செய்தபோது, எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கரும்புக்காட்டுக்குள், நேற்று கூண்டு வைத்தனர். சிறுத்தை சிக்காததால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதேசமயம் பீட்டரின் கன்றுக்குட்டியை கொன்ற பகுதியில் உள்ள கரும்புக்காட்டில், சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என, வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X