சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் கண்ணாடி உடைத்த இரு மாணவர்கள் கைது

Added : பிப் 05, 2020
Share
Advertisement
கோவை: குடிபோதையில் தனியார் பஸ்சின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள் இருவர், கைது செய்யப்பட்டனர்.மேட்டுப்பாளையம் - பொள்ளாச்சி செல்லும், தனியார் பஸ், 'டிரிப்' முடிந்து, அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகில், பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, பைக்கில் வந்த இரண்டு நபர்கள், பஸ்சின் பின் கண்ணாடியை உடைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் இருவரை

கோவை: குடிபோதையில் தனியார் பஸ்சின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள் இருவர், கைது செய்யப்பட்டனர்.

மேட்டுப்பாளையம் - பொள்ளாச்சி செல்லும், தனியார் பஸ், 'டிரிப்' முடிந்து, அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகில், பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, பைக்கில் வந்த இரண்டு நபர்கள், பஸ்சின் பின் கண்ணாடியை உடைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் இருவரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில், காங்கயத்தை சேர்ந்த வெங்கடேஷ்,20, ஹரி பிரனேஷ்,20, என்றும், இவர்கள் இருவரும், கோவையில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருவது தெரிந்தது.

மும்பைக்கு வேலைக்கு செல்லும் நண்பர் ஒருவர் வைத்த, 'பார்ட்டி'க்கு இருவரும் சென்று அளவுக்கு அதிகமாக மதுகுடித்துள்ளனர். போதை ஏறியதால், குடிபோதையில் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X