பொது செய்தி

தமிழ்நாடு

'பிரீசர்' இறைச்சியால், 'கொரோனா' : திருப்பூர் திரும்பிய மாணவர் தகவல்

Added : பிப் 05, 2020
Share
Advertisement

திருப்பூர்: சீனாவில், அனைத்து வகை இறைச்சியை, வாரக்கணக்கில், 'பிரீசரில்' இருப்பு வைத்து விற்பதால், 'கொரோனா' வைரஸ் உருவாகியதாக, அங்கு பயிலும், திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தெரிவித்தார்.

சீனாவில் பரவிய, 'கொரோனா' வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவில் இருந்த இந்தியர்கள், திரும்ப வந்துள்ளனர். திருப்பூரை அடுத்த, கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மகன் அபிஷேக், 20, சீனாவில் உள்ள, 'ஜிங்ஜியாங்' மருத்துவ பல்கலையில், மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். 1ம் தேதி திருப்பூர் வந்துள்ளார்.

அபிஷேக் கூறியதாவது:கொரோனா வைரஸ், இறைச்சி மார்க்கெட்டில் இருந்து பரவியுள்ளது. சீன மக்கள், அன்றாட உணவில், இறைச்சியை அதிகம் பயன்படுத்துவர். இறைச்சியை வாரக்கணக்கில் பிரீசரில் வைத்து விற்பதாலும், கொரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம்.
சீனர்கள், பாதியளவு வேக வைக்கும் இறைச்சியை விரும்பி உண்கின்றனர். சீனாவில், வூஹான் மாநிலத்தில் மட்டும் தான், இந்த பாதிப்பு உள்ளது. நாங்கள் இருக்கும், 'ஜிங்ஜியாங்' மாகாணம், 3,000 கி.மீ.,யில் உள்ளது. சீனாவில் இருந்து வந்த அனைவரும், சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற, கலெக்டர் உமா மகேஸ்வரி, நிருபர்களிடம் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து, சீனாவில் மருத்துவம் படிக்க, பணியாற்ற சென்ற, 104 பேர், தற்போது ஊர் திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில், அவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது, உறுதி செய்யப்பட்டது.
அவர்களின் வீட்டுக்கும், மருத்துவக் குழுவினர் தினமும் சென்று, பரிசோதனை செய்து வருகின்றனர். அதிலும், அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டுகளை, மருத்துவ கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், நேற்று திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X