சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.50 லட்சம் மோசடி: போலி அதிகாரி கைது

Added : பிப் 05, 2020
Advertisement

கோவை: பெண்ணின் பெயரில், வங்கியில், 50 லட்சம் ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த போலி வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், அன்னுார், நாகம்மாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள், 53. இவர்களுக்கு ஒரு மகன்; இரண்டு மகள்கள்.

இளைய மகள் பிரபாவதியின், 22 வயது மகன், சீனாவில் உள்ள மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவரது படிப்புக்கு பணம் தேவைப்பட்டதால், வங்கியில் கடன் பெற, ராஜம்மாள் முயற்சி செய்தார்.
இதற்கிடையில், ராஜம்மாளின் மகள் வீட்டில், வாடகைக்கு குடியிருந்த தன்ராஜ், 44, என்பவர், சென்னையில் வங்கி மேலாளராக பணியாற்றி வருவதாகவும், கோவை தனியார் வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.புரம் வங்கிக்கு வரவழைத்த தன்ராஜ், சொத்து பத்திரங்களை பெற்று, ராஜம்மாளிடம் கையெழுத்து வாங்கினார். '10 நாட்களில், ராஜம்மாள் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும்' எனக் கூறியுள்ளார்.

ஆனால், ராஜம்மாள் வங்கி கணக்கில் பணம் வரவில்லை. விசாரித்தபோது, ராஜம்மாள் சொத்து பத்திரத்தை வங்கியில் கொடுத்து, தன்ராஜ் மோசடி செய்தது தெரிந்தது. ராஜம்மாளின் ஆவணங்களை வைத்து, 50 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தன்ராஜ் மோசடியில் ஈடுபட்டுள்ளார். வங்கி மேலாளர் என, பொய் கூறி ஏமாற்றியுள்ளார்.

அன்னுார் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, தன்ராஜை கைது செய்தனர். உடந்தையாக இருந்த, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X