சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக அமெரிக்காவில் தீர்மானம்

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகர கவுன்சிலில், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சட்டத்தை எதிர்த்து, ஐரோப்பிய யூனியன் பார்லியில் சமீபத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. 'இந்த சட்டம் உள்நாட்டு விவகாரம். இதில் மற்றவர்கள் தலையிடக் கூடாது' என, மத்திய அரசு கூறியது. அதையடுத்து, ஐரோப்பிய பார்லி.,யில், தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகர கவுன்சிலில், சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர் சிட்டி கவுன்சில் இதை அறிமுகம் செய்தது. அமெரிக்க வாழ் இந்தியர் முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்டவை முன்மொழிந்தன.

மதத்தின் அடிப்படையில், குடியிரிமை வழங்குவதற்கு கண்டனம் தெரிவிப்பதாக, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
06-பிப்-202007:24:41 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவது விளம்பரத்துக்குத்தான். அங்குள்ள பஞ்சம்‌பிழைக்கும் ஜன்மங்கள் தீர்மானம் வெறும் விளம்பரத்திக்ஷ்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X