சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் சீருடை அணிந்து வழிப்பறி: பலே மோசடி கும்பலில் 6 பேர் கைது

Added : பிப் 05, 2020
Advertisement

ஓசூர் : குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி, போலீஸ் சீருடையில் வந்து பணம் பறிக்கும் கும்பலில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 45. இவரிடம், இரு மாதங்களுக்கு முன், 'பேஸ்புக்'கில் பழக்கமான சம்பத் என்பவர், 'என்னிடம் குறைந்த விலைக்கு தங்கம் உள்ளது; தேவைப்பட்டால், வேலுார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரை தொடர்பு கொள்ளலாம்' எனக் கூறி, மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளார்.

அந்த எண்ணில் சுரேஷ்குமார் பேசியபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகைக்கு பணத்துடன் வருமாறு, அவர் கூறியுள்ளார். ஜன., 4ல், தன் செவர்லெட் காரில், ஓட்டுனர் சிவராமகிருஷ்ணனுடன், சுரேஷ்குமார் பணத்துடன் பேரிகை சென்றார். அங்கு வந்த இருவர், கர்நாடக மாநிலத்துக்கு, சுரேஷ்குமாரை அழைத்துச் சென்றனர். கெசரகிரி சோதனைச்சாவடி அருகே, பொலீரோ ஜீப்பில் போலீஸ் உடையில் வந்தவர்கள், சுரேஷ்குமார் காரை வழிமறித்து, 7.80 லட்சம் ரூபாய், மொபைல் போன், ஓட்டுனர் சிவராமகிருஷ்ணன் அணிந்திருந்த, 32 கிராம் தங்க நகையை பறித்தனர்.

சுரேஷ்குமாருடன் வந்த இருவரை, விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர். வந்தவர்கள் மோசடி கும்பல் என்பதை அறிந்த சுரேஷ்குமார், பேரிகை போலீசில், 8ம் தேதி புகார் செய்தார்.
பேரிகை போலீசார், நேற்று முன்தினம், டி.என்.தொட்டி - பேரிகை சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு, காரில் வந்த, ஆறு ஆண்களை விசாரித்தனர். அவர்கள், சுரேஷ்குமாரை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கார் மற்றும், 7.80 லட்சம் ரூபாய், தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல், போலீஸ் போல் நடித்து பலரிடம் பணத்தை பறித்தது தெரிந்தது.கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இப்ராஹிம், கர்நாடகா மாநிலத்தில், செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வரும், டேனியல் ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X