தமிழ்நாடு

பஞ்சலோக சாமி சிலைகள் மீட்பு * கீரனூரில், 4 பேர் கைது

Added : பிப் 05, 2020
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில், 20 கோடிக்கு விற்க முயன்ற, ஒரு பீடம் மற்றும் ஐந்து பஞ்சலோக சிலைகளை போலீசார் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரை சேர்ந்த வெள்ளைச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சாமி சிலைகளை விற்க முயல்வதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில், போலீசார் கீரனுாரில் முகாமிட்டு, விசாரித்து வந்துனர். மேலும், சிலைகளை வாங்குவது போல நடித்து, வெள்ளைச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளான, ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த அரவிந்த், லால்குடியை சேர்ந்த குமார், தொடையூரை சேர்ந்த மதியழகன் ஆகியோரை, நேற்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது, வெள்ளைச்சாமி வீட்டில், சோமஸ்கந்தர், பார்வதி, சிவகாமி, விநாயகர், மாணிக்கவாசகரின் பஞ்சலோக சிலைகள் மற்றும், ஒரு பீடம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும், அவற்றை, 20 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
பிடிபட்ட நான்கு பேரும், கல்குவாரியில், 'பொக்லைன்' இயந்திரத்தை இயக்குபவர்களாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிலைகளை மீட்டனர்.

இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அபய் குமார் சிங் கூறியதாவது:
தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள், எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்பது குறித்து, விசாரித்து வருகிறோம். இந்த சிலைகள் பற்றி தகவல் தெரிந்தோர், 94981 54500 என்ற, மொபைல் போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், இந்த சிலைகள் வெள்ளைச்சாமி உள்ளிட்ட நால்வருக்கும் எப்படி கிடைத்தது; இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்றும், விசாரணை நடக்கிறது. ஏற்கனவே, ஜன., 5ல், சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜசேகர் என்பவரிடம் இருந்து, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலேசாக அம்மன் சிலையை மீட்டோம். அந்த சிலை, அரியலுார் மாவட்டம், குவாகம் என்ற பகுதியில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டது என, தெரியவந்துள்ளது. அந்த சிலை விரைவில், கோவிலில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X