அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் இயக்கமாக்குங்க! ஸ்டாலின் வேண்டுகோள்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020
Advertisement

சென்னை: 'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிடும் வகையில், கட்சி தொண்டர்கள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, பிப்., 2 முதல், 8ம் தேதி வரை, கையெழுத்து இயக்கம் நடத்த, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கம், தமிழகம் முழுவதும், தீவிரமாக நடக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமம் கிராமமாக, திண்ணை பிரசாரம் போலவும், நகர்ப்புறம் என்றால், வீதி வீதியாக மக்களை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஓட்டளித்த, அ.தி.மு.க.,வின் துரோகத்தையும், மத்திய பா.ஜ., அரசின் வஞ்சகத்தையும், விளக்கிட வேண்டும்.
கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை வழங்கிட வேண்டும். இந்த கையெழுத்து இயக்கம், உணர்வுப் பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும், மக்களின் பேரியக்கமாக நடக்க வேண்டும்.

அனைத்து கையெழுத்து படிவங்களையும், வரும், 9, 10ம் தேதிக்குள், கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். ஒரு கோடி கையெழுத்துக்களையும், எம்.பி.,க்கள் எடுத்துச் சென்று, ஜனாதிபதியை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்துவர்.மத்திய பா.ஜ., ஆட்சி மற்றும் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க., ஆட்சியின் முகமூடியை, மக்கள் மத்தியில் கிழித்தெறியும் வகையில், கட்சி தொண்டர்கள், முழு வீச்சில் பணியாற்ற வேண்டும். ஒரு கோடியெழுத்துக்கு மேல் பெற்று விட்டோம் என்ற வெற்றி செய்தியுடன், கையெழுத்து படிவங்கள், அண்ணா அறிவாலயத்தில், மலைபோல் குவிந்திட வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X